புகழ்பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா - கோவை தண்டு மாரியம்மன் கோயில்
கோவையில் புகழ்பெற்ற சுமார் 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயிலில் 2022ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி, ஒப்பணக்காரவீதி, புரூக் பாண்டு சாலை, நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை ஆகிய சாலைகளின் வழியாக ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, பூங்கரகம், பால் காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.