இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஆசிரியர்கள் கருத்து - illam thedi kalvi
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க, 1.70 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு பள்ளி முடிந்து மாலை நேரத்தில் மாணவர்களின் வீடுகளின் அருகே சென்று பாடம் நடத்தும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 27 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் அருணன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்.