தடுப்பூசி சிறப்பு முகாமில் தமிழிசை ஆய்வு - புதுச்சேரி
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி பெறும் வகையில் பல தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே.நகரில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.