வீடியோ: செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை உப்பில் வரைந்த பள்ளி மாணவர்கள் - செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை வரைந்த மாணவர்கள் அசத்தல்
கோவை: மாமல்லபுரத்தில் வரும் 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை 44ஆவது சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள மணியகாரம்பாளையத்தில் கேம்போர்டு பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை வண்ண வண்ண உப்பில் வரைந்துள்ளனர். 40 அடி உயரம் 20 அடி அகலத்தில் வண்ண வண்ண உப்பை கொண்டு இந்த சின்னத்தை வரைந்துள்ளனர். 40 மாணவர்கள் இணைந்து 2 மணி நேரத்தில் இந்த சின்னத்தை வரைந்துள்ளனர்.