மாணவர்கள் அனைத்து துறைகளிலும் கால் பதிக்க வேண்டும் - கோபிநாத் - கல்லூரி கனவு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஊடக பேச்சாளர் கோபிநாத், “தான் தேர்ந்தெடுக்கும் துறையில் ஏதேனும் ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்வி மாணவர்களுக்கு இருக்க வேண்டும். மாணவர்கள் அனைத்து துறைகளிலும் கால் பதிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.