கிராமசபை கூட்டத்தை ரத்து செய்தது சட்ட விரோதம்: சமூக ஆர்வலர் - சமூக ஆர்வலர்
கரோனா ஊரடங்கு காரணமாக சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடக்க இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கிராம சபைக் கூட்டங்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு பெரும் சர்ச்சை உருவானது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் முறையாக வரும் 15ஆம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கிராமசபை கூட்டத்தை ரத்து செய்தது குறித்து சமூக ஆர்வலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.