Video: அஜாக்கிரதையாக மரத்தை வெட்டியதால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான பறவைகள்... கேரளாவில் கொடூரம் - NHAI
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், ரண்டதானி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்கொண்ட சாலை மேம்பாட்டுப் பணியின்போது, மரத்தை அஜாக்கிரதையாக வெட்டியதால் ஏராளமான பறவைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் (செப். 1) முதல் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் உத்தரவிட்டுள்ளார்.