தாளவாடியில் பலத்த மழை: மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடக்கம் - தாளவாடியில் பலத்த மழை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைக்கிராமங்களில் நேற்று (மே 10) அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வந்ததால், தாளவாடி, மல்லன்குழி, திகினாரை, அருள்வாடி, மெட்டல்வாடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பொதுதேர்வு எழுதும் மலைக்கிராம மாணவர்கள் மழையில் நனைந்துபடி பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து பெய்த மழையால் முட்டைகோஸ், தக்காளி சாகுபடி நிலங்களில் மழை நீர் தேங்கியது. தொடர்ந்து மழை நீடித்தால் செடிகள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.