சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதிய விபத்தில் உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி - கார் விபத்து
ஈரோடு பெருந்துறை மேட்டுகடையில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ருக்மணி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டி மீது கண் இமைக்கும் நொடியில் கார் மோதி தூக்கி வீசப்படும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.