விக்கிரவாண்டி அருகே தைலம் மரக்காட்டில் பயங்கர தீ விபத்து; தீக்கிரையான தைல மரங்கள்! - திண்டிவனம் தீயணைப்புத்துறை
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வீடூர் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது. இங்கு நேற்றுமுன் தினம் (ஜூன்30) இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வேகமாக வீசிய பலத்த காற்றினால், தீ மேலும் பரவத்தொடங்கியது. இதனால், ஏராளமான அரிய வகை தைல மரங்கள் நெருப்பிற்கு இரையாகின. இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு பகுதிகளைச்சேர்ந்த தீயணைப்புத்துறையினர் இரவு முழுதும் பற்றி எரிந்த தீயை அணைக்க முடியாமல் திணறினர். பின்னர், ஒருவழியாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இதில் பல லட்சம் மதிப்புடைய தைலமரங்கள் எரிந்து சாம்பலாகின.