ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ.2 லட்சம் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை - பணம் திருட்டு
புதுச்சேரியை அடுத்த கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன். ஒய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான இவர் பாக்குமுடையான்பட்டு பகுதியிலுள்ள இந்தியன் வங்கியில் நேற்று (மே 07) ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் திரும்பினார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வாகனத்தில் வைத்திருந்த பணம் காணாமல் போயிருந்தது. உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்த நிலையில் காவல் துறையினர் வங்கி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தலையில் தொப்பி அணிந்திருந்த நபர் ஒருவர் ராமநாதனை பின் தொடரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனடிப்படையில் காவல் துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.