75 கிலோ கலர் பொடியில் பள்ளி மாணவர்கள் வரைந்த மகாத்மா காந்தி ஓவியம் - 75 கிலோ கலர் பொடியில் பள்ளி மாணவ மாணவிகள் வரைந்த மகாத்மா காந்தி ஓவியம்
ஈரோடு: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவடைந்த நிலையில், மகாத்மா காந்தியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், கொல்லம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஆசிரமம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12 விதமான 75 கிலோ கலர் பொடிகளை கொண்டு 750 சதுர அடியில், சுமார் ஏழரை மணி நேரம் செலவழித்து காந்தியின் படத்தை ஓவியமாக வரைந்துள்ளனர். இதனை பொதுமக்கள் பார்வையிட நாளை முதல் 3 நாட்கள் அனுமதிக்கப்படும் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.