கிளிகளை சேர்த்த காதல்!
ஆந்திரா மாநிலம், திருப்பதியில் கடந்த பத்து மாதங்களாக லைலா மஜ்னு என்ற பெயர் கொண்ட காதல் ஜோடி கிளிகளை உணவக உரிமையாளர் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு மஜ்னு காணாமல் போய் விட்டது. இதனால், லைலா உணவு அருந்தாமல் மஜ்னுவை தேடி காலத்தை கடத்தியுள்ளது. இந்நிலையில், மரத்தில் மஜ்னுவை பார்த்த உணவக உரிமையாளர் அதனை பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால், அது பறந்து விட்டது. பின்னர், லைலா வை பார்த்து மஜ்னு திரும்பி வந்துள்ளது. இந்த கிளிகளின் காதலை பார்த்த உணவக உரிமையாளர் நெகிழ்ந்துள்ளார்.
Last Updated : Sep 26, 2019, 7:02 PM IST