கும்பகோணம் அருகே குட்டி குட்டி ராதாகிருஷ்ணர்கள் ஆட்டம் பாட்டம்.. - ஆட்டம் பாட்டம்
தஞ்சாவூர்: கும்பகோணம்-கொரநாட்டுக்கருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, இன்று (ஆக.18) நடந்த விழாவில் ஏராளமான குழந்தைகள் ராதா கிருஷ்ணன் வேடமணிந்தனர். தொடர்ந்து கிருஷ்ணரைப் போற்றி பாடல்களைப் பாடி மாணவ-மாணவிகள் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.