பக்தர்களின் நலன் காக்க கோயிலில் முதலுதவி மருத்துவ சேவை மையம்..! - திருச்சி அரங்கநாதர் திருக்கோயிலில் முதலுதவி மருத்துவமனை
ஒரு நாளைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஆரியரக்கணக்கானோர் வரும், திருச்சி அரங்கநாதர் திருக்கோயிலில், பக்தர்கள் வசதிக்காகவும், அவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாகவும், கோயிலில் உள்ள சந்திர புஷ்கரணி குளத்தின் அருகே, கோயில் நிர்வாகத்தின் சார்பில் முதலுதவி மருத்துவ சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். தொடர்ந்து அங்கு பணி புரிய உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.