தேசிய கல்விக் கொள்கை சாதகமா? பாதகமா? - விவாதம் - திமுக
டெல்லியில் அண்மையில் கூடிய மத்திய அமைச்சரவை, தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசும் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளது. அக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மற்ற அம்சங்கள் குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்கு சாதகமா? பாதகமா?, என்பது குறித்து கல்வியாளர் செல்வக்குமார், ஆசிரியர்கள் சங்க நிர்வாகி இளமாறன், பாஜகவின் சூர்யா ஆகியோர் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சியைக் காணலாம்...