பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டணும் - ஆலோசனை கூறும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்! - kadar mohaideen
திருச்சி: மாநகர ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், 'பாகிஸ்தானுடன் இந்தியா நல்லுறவை ஏற்படுத்தி சுமுகத் தீர்வை உருவாக்கினால் அங்குள்ள தீவிரவாதப் போக்கை தடுத்து நிறுத்தக்கூடிய அளவிற்கு இந்தியாவின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவையும், நல்லிணக்கத்துடன் நடந்துகொள்ளும் முறையும் மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதுடன் உலக மக்கள் பாராட்டும் வகையில் உள்ளது’ என்றார்.