தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் வெள்ள மீட்பு ஒத்திகை! - thiruvallaur news
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் இன்று (ஜூன்.10) வெள்ள மீட்பு ஒத்திகை பணியில் ஈடுபட்டனர். அதன்படி வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற இந்த வெள்ள மீட்பு ஒத்திகையில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள், அலுவலர்கள் வருவாய்த்துறையினர் பங்கேற்றனர். மீட்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.