ராணுவ வீரர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்! - ஆயுதங்களுக்கு பூஜை
விஜயதசமியையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஆலி ராணுவ முகாமுக்கு சென்றார். இன்று காலை ராணுவ முகாமை அடைந்த ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார், பிறகு அவர்களுக்கு விஜயதசமி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே முன்னிலையில், ஆயுங்களுக்கு பூக்களை வைத்து பூஜை செய்தார். அதைத்தொடர்ந்து, வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.