அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..!
தென்காசி: முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியின் 99வது பிறந்த நாளையொட்டி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை செங்கோட்டை திமுக சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மற்றும் கருணாநிதியின் பிறந்தநாள் இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதை அடுத்து கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.