காவிரியில் நீர்வரத்து 1,15,000 கன அடியாக அதிகரிப்பு - ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை - தர்மபுரி
தர்மபுரி: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றுப்பகுதியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீர்வரத்து இன்று நண்பகல் 1 மணி நிலவரப்படி 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. பறந்து விரிந்து ஓடும் காவிரி ஆற்றின் பிரத்யேக காணொலியை காணலாம்.