கொடைக்கானலில் பூங்கொத்து அலங்கார பயிற்சி வகுப்பு; சுற்றுலா பயணிகள் ஆர்வம் - கொடைக்கானல்
திண்டுக்கல்: கொடைக்கானல் தமிழ்நாடு விடுதியில் பூங்கொத்து அலங்கார பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் பூங்கொத்துக்கள், மேசைமீது வைக்கும் அலங்கார மலர்கள், சுவற்றில் அலங்கரிக்கும் முறைகளுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த பயிற்சியாளர்கள், மலர் அலங்காரத்தில் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகளுக்கு, பூங்கொத்து தயாரிப்பதற்கான பயிற்சி் அளித்தனர்.