அரசு பேருந்தின் கம்பியை பிடித்தவாறு ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவர் - Trending video
கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர், போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை அவிநாசி சாலையில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்துக் கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்துள்ளார். இந்த ஸ்கேட்டிங் பயணம், சித்ரா பகுதியில் இருந்து ஹோப்ஸ் கல்லூரி வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை சென்றுள்ளது.