திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா - அமாவாசையை பவுர்ணமியாக்கிய அம்மன்
மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இது தேவாரப்பாடல் பெற்ற இடமாகும். இந்த இடத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்யப்பட்டதும், பக்தரான அபிராமி பட்டருக்காக அம்பாள் அமாவாசையை பவுர்ணமியாக்கிய புராண நிகழ்வும் நடைபெற்ற தலமாகும். இக்கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சீரிய முயற்சியால் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (மார்ச் 27) மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST