ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்! - Curfew
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் வறண்ட நிலையில், குளம் ஒன்று உள்ளது. அக்குளத்தில் அப்பகுதி இளைஞர்கள் ஊரடங்கை மறந்து கிரிக்கெட் விளையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்று குறித்த எந்த அச்சமும் இல்லாமலும், முகக் கவசம் அணியாமலும் கிரிக்கெட் இளைஞர்கள் விளையாடியதால் தற்போது கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.