சீரழிந்த பிரிட்டிஷார் காலத்து காவல் நிலையம்.. சீரமைக்க கோரிக்கை
இந்திய விடுதலைக்குப் பின்னரும் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட ஏற்காடு காவல் நிலையம் சீரிய முறையில் செயல்பட்டு தொடர்ந்து காவல் பணிகள் தொய்வின்றி நடந்து வந்துள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் வீரர்களும், சேலத்தைச் சேர்ந்த போலீசாரும் பணிபுரிந்துள்ளனர். வரலாற்றில் இடம்பிடித்த இந்த ஏற்காடு காவல் நிலையம் தற்போது சீரழிந்த நிலையில் காணப்படுவதால் அவற்றை சீரமைத்து அருங்காட்சியகமாக மாற்றிட வேண்டுமென்று ஏற்காடு பகுதி சமூக செயற்பாட்டாளர்களும், மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.