வனத்துறையினருக்கு தண்ணிகாட்டும் காட்டுயானை! - கோயம்புத்தூர் செய்திகள்
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாவுடப்பு, அப்பர் ஆழியார், ஆண்டியூர், பருத்தியூர், நவமலை, அர்த்தநாரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் அரிசி ராஜா என்ற காட்டுயானை அட்டகாசம் செய்துவருகிறது. யானையை விரட்ட வனத்துறையினர் கடந்த மூன்று நாட்களாக போராடி வருகின்றனர். மூன்று நாட்கள் ஆகியும் யானையை வனத்துறையினர் பிடிக்கவில்லை என அப்பகுதிமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.