'100% VOTE' வயல்வெளியில் புதுமையாகத் தேர்தல் விழிப்புணர்வு! - 100% vote campaign
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் அலுவலர்கள் சார்பில் வயல்வெளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டது. இதில் அறுவடைக்குத் தயாராக இருந்த வயல் ஒன்றில் ’100% VOTE’ என்ற வாசகத்தின் எழுத்து வடிவத்திற்கு ஏற்ப நெற்பயிர்கள் கத்திகரிக்கப்பட்டிருந்தன. தேர்தல் அலுவலர்கள், பொதுமக்கள் இந்த வாசகத்தைச் சுற்றி நின்றபடி 100% வாக்களிப்போம், வாக்களிப்பது நம் கடமை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.