Viluppuram: பெருமழையால் துண்டிக்கப்பட்ட மூன்று கிராமங்கள்! - பொதுமக்கள் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தொடர் மழை காரணமாக ஏரி ஆறுகளில் உள்ள நீர் அதிகளவு வெளியேறி கிராமப்புற சாலைகளை சூழ்ந்துள்ளது. இதனால் மூன்று கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கூட 15 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஓங்கூர் ஆற்றில் அதிகப்படியான நீர் வரத்து தற்போது வெளியேறி வருகிறது.