‘வண்டி மேல கை வச்ச அவ்ளோதான்’ - வைரலாகும் வீடியோ - அபராதம்
சென்னையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிவதால், கரோனா பரவக் கூடும் என, அதனை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மண்ணடியில் முககவசம் அணியாமல் வந்த நபரை மடக்கி பிடித்த அபராத தொகை செலுத்துமாறு கேட்டபோது, அந்த நபர் தான் எஸ்.டி.பி.ஐ கட்சியில் மாநில செயலாளர் எனவும், வாகனத்து மீது கை வைத்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று கூறி காவல்துறையினரை மிரட்டியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.