திடக்கழிவு மேலாண்மையில் வேலூர் மாநகராட்சி முதலிடம்..! - Cleaning staff
வேலுாா்: துப்புரவுப் பணியாளர்கள் மூலம் நாள்தோறும் 230 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மகளிர் சுய உதவிக் குழு மூலமாகக் குப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு மட்காத குப்பைகளைச் சாலை அமைக்கப் பயன்படுத்தவும், மட்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு மாநகராட்சி இலவசமாக வழங்குகின்றனர். இந்த திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி சாலைகளில் குப்பைகளை எறியக்கூடாது என்ற திட்டத்தைத் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் முறையாகச் செய்தால் இத்திட்டம் வெற்றி பெறும்.