திருவள்ளூரில் பயங்கரம்: பைக் மீது வெடிகுண்டு தாக்குதல் - உடல் சிதறி உயிரிழந்த 2 இளைஞர்கள்! - bomb blast at thiruvallur
திருவள்ளூர்: விஷ்ணு காஞ்சி என்ற பகுதியை சேர்ந்த கோபி (19), சிவா (20) ஆகிய இருவரும் பைக்கில் சென்ற போது, 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டி விட்டு தயாராக எடுத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை வீசி படுகொலை செய்தனர். பின்னர் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், ரவுடி தியாகு கோஷ்டியினர்தான் படுகொலை செய்தது தெரியவந்தது. தற்போது காவல் துறை தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.