தாம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம்: 100க்கும் மேற்பட்ட விசிக, மனிதநேய மக்கள் கட்சியினர் கைது - train roko in Tambaram
சென்னை: திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம்பரம் ரயில் நிலையத்தில், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு, ராமேஸ்வரத்திலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலை மறித்தனர். இதில், ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.