சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க முதுமலையில் 'இயற்கை பள்ளி'
நீலகிரி: சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் முதுமலை யானைகள் முகாம் அருகே 50 லட்சம் செலவில் 'இயற்கை பள்ளி' என்னும் அருங்காட்சிகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதுமலையில் உள்ள வன விலங்குகள், பறவைகளில் உருவங்கள், வாழ்விடம், உணவு முறை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. லங்கூகுர், யானை, தவளை உள்ளிட்வைகளின் படங்களை காணும்போது, அவை எழுப்பும் சப்தம் கேட்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களுக்காக புலி தோல்கள் மற்றும் யானை உள்ளிட்ட விலங்குகளின் எலும்பு கூடுகள் வைகப்பட்டுள்ளன.