தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சிற்பக் கண்காட்சி பணிகள் தீவிரம்! - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சின்னசங்கரன் கோயில் அருகில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் சிற்பக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி, கும்பகோணம் ஆகிய ஊர்களில் உள்ள நுண்கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பிரபல ஓவியர் சந்துரு ஆகியோர் இணைந்து பல்வேறு சிற்பங்கள் அமைத்து வருகின்றனர். இந்தக் கண்காட்சி திறப்பு விழா வருகிற 20ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.