முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு - nilgris hill station
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல வனப் பகுதியில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணியின் ஒரு பகுதியாக தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள், கணக்கெடுப்பு மற்றும் வாழ்விட மதிப்பீட்டுப் பணி இன்று தொடங்கியது. இக்கணக்கெடுப்பு 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி வகுப்பு நேற்று (நவ.24) தெப்பக்காடு யானை முகாமில் உள்ள மேம்பட்ட வனவிலங்கு மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.