கனமழையில் வேரோடு சாய்ந்த வாழை மரங்கள்! - நீலகிரி மாவட்ட செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில், தேவாலா, பந்தலூர், அப்பர் பவானி ஆகிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பந்தலூர் அருகே மூன்று ஏக்கருக்கு மேல் பயிர் செய்யப்பட்டு, அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த வாழை மரங்கள் சூறாவளிக் காற்றில் வேரோடு சாய்ந்தன.