ஆபத்தை உணராத மக்கள்: ஆற்றைக் கடக்கும் அப்பத்தான் முயற்சியில் 20 கிராம மக்கள் - ஆற்றைக் கடக்கும் அப்பத்தான் முயற்சி
கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தொரடிப்பட்டு தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், 20 கிராமத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தொரடிப்பட்டு தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலர் காட்டாற்று வெள்ளத்தில் கடந்து சென்று வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துப் பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக தரைப்பாலம் அல்லது மேம்பாலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.