எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் பாஜகவோடு கூட்டணி வைக்கக் கூடாது - திருமாவளவன் - போராட்டம்
சென்னை: திரிபுராவில் இடதுசாரிகள் மீது நடத்தப்பட்ட கலவரம் காரணமாக பாஜகவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (செப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட திருமாவளவன், திரிபுராவில் பாஜக நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும், சாதிகளை வளர்ப்பதன் மூலம் இந்து உணர்வை எழுப்பலாம் என பாஜக நினைக்கிறது எனவும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் பாஜகவோடு கூட்டணி வைக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.