பேருந்தை வழிமறித்த காட்டு யானை: பீதியில் உறைந்த பயணிகள் - வனத்துறையினர் நடவடிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்து, பின்தொடர்ந்த ஒற்றை காட்டு யானையால், பேருந்தில் பயணித்த பணிகள் பீதியில் உறைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர், காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பேருந்தை வழிமறித்த காட்டு யானையை பயணி ஒரு தனது செல்போனில் படம்பிடித்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அக்காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.