தேர்தல் பாதுகாப்பிற்காக காஞ்சிபுரத்தில் குவிந்த துணை ராணுவம்! - துணை ராணுவம்
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்களித்திடவும், தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காகவும் மாவட்டத்திற்குத் துணை ராணுவம் வந்தடைந்தது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவம், காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து மூங்கில் மண்டபம் வழியாக பிள்ளையார்பாளையம் பகுதி வரையிலுள்ள முக்கிய சாலைகளில் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.