கரோனா பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டியவை என்ன? - தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல்
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 978 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள், அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், பாதுகாப்பாக இருத்தல் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று நாள்களில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதும் இல்லையென்றால் மூன்று நாள்களில் வீட்டுத்தனிமை முடிவடையும். இருப்பினும் ஒரு வார காலம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.