மாட்டு வண்டியில் வலம் வந்த மணமக்கள்! - மணமக்கள்
பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியைச் சேர்ந்த பூபதிக்கும், பணப்பட்டி பகுதியைச் சேர்ந்த இந்திராவிற்கும் அங்கித்தொழுவு காளியம்மன் கோவிலில் இன்று திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மணமகன் இல்லத்திற்கு மாட்டு வண்டியை தனியாக மணமகனே ஓட்ட, அவருடன் மணமகள் இந்திரா உடன் அமர்ந்திருந்தார். உறவினர்களும், நண்பர்களும் மற்ற மாட்டு வண்டிகளில் உடன் வந்தனர். மணமக்கள் ஊர்வலமாக சாலையில் வந்ததை ஊர் மக்கள் வியப்புடன் பார்த்து மணமக்களை வாழ்த்தினர்.