குன்னூரில் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும் தம்பி சிப்பாய் பூங்கா!
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் - எம்.ஆர்.சி., நாட்டின் தலைசிறந்த படைப்பிரிவாக செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்காலத்தில் யானை படையை போரில் பயன்படுத்தியது தொடர்பாகவும், யானை மீது வீரர் அமர்ந்திருப்பதை போன்ற சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதி தம்பி சிப்பாய் பூங்கா என்று பெயர் வைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அனுமதி செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகள் தம்பி பூங்காவை போட்டோ எடுத்து செல்கின்றனர்.
Last Updated : Jan 10, 2021, 7:38 PM IST