கரோனா தடுப்பூசி முகாம் - 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு - மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை கரோனா தடுப்பூசி 4 லட்சத்து 14 ஆயிரத்து 991 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1லட்சத்து 46 ஆயிரத்து 937 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தகவல் வெளியாகியுள்ளது.