கலாம் பிறந்தாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்! - கலாம் பிறந்த நாள் விழா
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 89ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வில்வித்தை, ஸ்கேட்டிங், டேக்வாண்டோ, சிலம்பம் ஆகிய போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.