குழந்தை தொழிலாளர்களுக்கான சிறப்பு பள்ளிகள் மூடல்!
விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் 1987ஆம் ஆண்டு சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில், மொத்தம் 22 தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் நான்கு பள்ளிகளை மாணவர்களின் எண்ணிக்கையை காரணம்காட்டி மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை மூடினால் மாணவர்களின் கல்வி பாதிக்கும், அவர்களின் கல்வியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.