பாம்பை விழுங்கும் பாம்பு - கட்டு விரியன் பாம்பு
கடலூர் அருகே சாவடி ராம் நகரில் வீட்டின் வாசல் முன் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு, 2 அடி நீளமுள்ள நிழுவை, சுவரொட்டி என அழைக்கப்படும் மற்றொரு பாம்பை விழுங்குவதை பார்த்த அப்பகுதி மக்கள், பாம்பு பிடி வீரரான செல்லாவுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற அவர், சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்து பாம்பை முழுவதுமாக விழுங்கிய பிறகு அதனை லாவகமாக பிடித்து காப்பு காட்டில் உயிருடன் விட்டார் .