திருத்தணி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் கடைகளுக்கு சீல் - திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்குச் சொந்தமான கடைகள் திருத்தணி மாபொசி சாலையில் உள்ளது. இந்தக் கடைகளை தனியாரிடம் வாடகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், முறையாக வாடகை செலுத்தாத காரணத்தால் நீதிமன்றம் உத்தரவுபடி அப்புறப்படுத்தப்பட்டது. திருத்தணி முருகன் கோயில் உதவி ஆணையர் ரமணி, மேலாளர் பழனி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் அருணாச்சலம் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடைகளை அகற்றி சீல் வைத்தனர்.