காசிமேடு துறைமுகத்தில் ஏற்பட்ட கடல் சீற்றம்! - நிவர் புயல்
சென்னை: நிவர் புயலானது நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. மேலும், மெரினா கடற்கரை, எண்ணூர் துறைமுகம், காசிமேடு துறைமுகம் ஆகிய இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தி, பாதுகாப்பு முகாமிற்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.